மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் ஏற்பட்டால் வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை மீட்டெடுப்பது பற்றி நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாக கனேடிய மத்திய ஆய்வக சோதனை நிறுவனமான லைஃப் லேப்ஸ் அறிவித்துள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், லைஃப் லேப்ஸ் தனது பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் இணையவழித் தாக்குதல்கள் தொடர்பில் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும், பணம் செலுத்துவதன் மூலம் முக்கியமான தரவுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் அலுவலகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் அலுவலகம் மில்லியன் கணக்கான லைஃப் லேப்ஸ் வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது