அமெரிக்காவின் ‘பொருளாதார பயங்கரவாத’ நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் போராட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டிலிலேயே ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி இதனை வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தனது டொலர் பணத்தின் மூலமும், பொருளாதார ராஜ்ஜியத்தின் மூலமும் நாடுகள் மற்றும் சாவதேச பொருளாதாரத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதனைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளை அமெரிக்கா பிற நாடுகள் மீது மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் பரபரஸ்பர ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என கூறினார்
சவூதி அரேபியாவால் புறக்கணிக்கப்பட்ட இந்த மாநாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான், கட்டார், துருக்கி ஆகிய 54 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 பிரதிநிதிகளும், மலேசியாவின் 150 பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில், பங்கேற்றன.
மேலும், சவூதி அரேபியாவை ஆதரிக்கும் பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
எனவே, சவூதி அரேபியாவில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி) போட்டியாக மற்றுமோர் இஸ்லாமிய அமைப்பை அமைக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.