குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பொலிஸாருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைவாக அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இழப்பீடாக தலா 10 இலட்சம் ரூபாய் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேபோன்று, மங்களூரு நகரில் இன்று மாலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. எனினும் 4 பேருக்கு மேல் ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.