டெல்லி கிராரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீவிபத்து இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்டுள்ளது.
இதன்போது 3 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த தீவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.