மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்ற நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
குஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குறித்த பேரணி இடம்பெற்றுள்ளது.
ஆஸ்டின் ராலே மற்றும் சியாட்டில் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பேரணியாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளின் கொடிகளை ஏந்தியபடியும் ஆதரவு அட்டைகளுடன் கோஷங்கள் எழுப்பியபடியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டேல்லா, சான் பிரான்சிஸ்கோ, சிக்காக்கோ, நியூயார்க், வாஷிங்டன், சேன் ஜோஸ், அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.