குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 51 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பிலும், நாம் தமிழர் கட்சி சார்பிலும் இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சியின் பந்த் போராட்டத்திற்கு சில சமூக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
பண்டிக்காலத்தை கருத்திற்கொண்டு பந்த் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி திட்டமிட்டப்படி போராட்டத்தை முன்னெடுத்தது.
இதன்போது புதுவை பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்து கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.