2020 ஆம் ஆண்டு கீச்சகத்தில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலாம் இடம் பிடித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் கீச்சகத்தில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை கீச்சக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து மக்கள் அதிகம் கீச்சகப் பதிவு செய்துள்ளனர்.
அவரைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோன்று மூன்றாவதாக அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ப்ளாய்டின் கொலை குறித்து அதிகம் கீச்சகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 10 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.