ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு கொரில்லாப் படையினர் தாக்குதல் நடத்தி தூதரகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சிறை வைத்தனர். இதன் எதிரொலியாக வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா கடற்படை விரைந்து அனுப்பப்படுகிறது.
ஏற்கனவே ஈராக் நாட்டில் உள்ள சுமார் 5200 ராணுவ வீரர்களுடன் இப்பொழுது மேலும் 750 அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இவர்கள் ஈராக் நாட்டுக்கு விமானம் மூலம் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க வீரர்களை தவிர ,வளைகுடா பிராந்தியத்தில் சுமார் 14000 அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பல நாடுகளில் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களை நினைத்தவுடன் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உஷார் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க விமானப்படை ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள கதாய்ப் ஹெஸ்பொல்லா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தீவிரவாதிகள் ஈரான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவர்கள் என அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் மொத்தம் 25 தீவிரவாதிகள் குண்டு வீசி கொல்லப்பட்டனர். அதனால் ஆத்திரமடைந்த ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது திடீரென முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.
அமெரிக்க தூதரகத்தில் தங்கியுள்ள தீவிரவாதிகளை வெளியேறும்படி புதன் கிழமையன்று பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் கோரினார்கள். இந்தக் கோரிக்கையை தீவிரவாதிகள் அமைப்பின் ஒரு பிரிவு ஏற்கவில்லை. ஆனால் மற்றொரு பிரிவு ஏற்றுக்கொண்டு தூதரகத்தை விட்டு வெளியேறத் தொடங்கியது.
அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த ஈராக் இராணுவம் தீவிர நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை தீவிரவாதிகள் தூதரகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய பிறகு தான் நான்கு கவச வாகனங்களில் இராக் இராணுவத்தினர் அமெரிக்க தூதரகத்துக்கு வந்தனர் தூதரகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து அவர்களை துரத்த முயற்சிக்கவில்லை அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே ஈராக் இராணுவ வீரர்கள் வளையமாக நின்றனர்.
ஈராக் ராணுவத்தின் செயலற்ற நிலை காரணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ இராக் பிரதமரையும் ஈராக் ஜனாதிபதியையும் கடுமையாக எச்சரித்தார்.
அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்க நேரடியாக அமெரிக்க இராணுவம் நடவடிக்கையில் இறங்கும் என்று கூறும் அறிக்கையினை அமெரிக்க அரசு வெளியிட்டது.
அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் தான் பொறுப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அதற்காக ஈரான் மீது அமெரிக்கா படை எடுக்கப் போவதில்லை. உரிய கடுமையான விலையை ஈரான் செலுத்த நேரிடும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் பெயரை பாம்பியோ வெளியிட்டார்.
உடனடியாக குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்குக்கு அனுப்பப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளார்.