2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள மூன்று கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், காணாமல்போனோர் தொடர்பான சட்டத்தை மீண்டும் ஆராய்ந்து அதனை நீக்க நடவடிக்கை எடுப்பது, பாதுகாப்புப் படைகளை மறுசீரமைப்பது போன்ற விடயங்களை கோத்தபயா ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டத்தொடருக்கு முன்னதாக அரசாங்கம் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது