மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் அனைவரையும் தேடி வருவேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். விரைவில் மக்களுக்கு நல்லது செய்ய உங்கள் அனைவரையும் தேடி வருவேன்.
இன்று எங்களது 30ஆம் ஆண்டு திருமணநாள். அதை உங்கள் முன்னிலையில் கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி எங்களது உண்மையான குடும்பமான தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாடுவது மிகவும் சந்தோஷம். வெகு விரைவில் ஊர் ஊராக வந்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார்.
தமிழகத்தின் முதன்மையான கட்சியாக தே.மு.தி.க. திகழும். கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். அதற்காக குட்டக்குட்ட குனிந்து வாங்கும் சாதி அல்ல. வருகிற 2021இல் தலைவர் கேப்டன் தலைமையில் ஆட்சி அமையும் என்று நாம் உறுதி ஏற்போம். இனி என்றும் எங்களுக்கு வளர்பிறை தான்” என்று அவர் தெரைிவித்தார்.