பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் அவரது துணைவியார் மெலானியாவும் இந்தியா வர இருக்கிறார்கள் என்ற தகவலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்தார்.
இந்தியா வரும் அமெரிக்க அதிபர் தம்பதிக்கு அவர்கள் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பு மிக்க வகையில் வரவேற்பு அளிப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் செய்தி விவரம்:
இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் உறுதியுடன் இயங்குகின்றன. பல்வேறு பிரச்சனைகளில் இந்த இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு தந்து இயங்கிவருகின்றன. இந்த இரண்டு நாடுகளின் நட்புறவு அமெரிக்க, இந்திய குடிமக்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் சிறப்புடையதாக அமையும்.
பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபரும் அவரது துணைவியாரும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அமெரிக்க அதிபரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
இந்திய – அமெரிக்க உறவு மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வருகை பெரிதும் பயன்படும்.
இந்தியாவுக்கு அமெரிக்க அதிபரும் அவரது துணைவியாரும் வரும் பொழுது அவர்கள் நினைவில் என்றும் நிற்கத் தக்க மகத்தான வரவேற்பினை இந்தியா வழங்கும்.
இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.