கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஜப்பான் கப்பலில் 2 பேர் உயிரிழந்தனர்.ஜப்பானியக் கடலில் கரோனா காய்ச்சல் கண்காணிப்பிற்காக நங்கூரம் இடப்பட்டுள்ள டைமன்ட் பிரின்சஸ் என்ற கடலில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு இல்லாத 500க்கும் மேற்பட்ட பயணியர் வெளியேறுவதற்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து யோகஹாமா துறைமுகத்தில் இருந்து பேருந்து மற்றும் கார்கள் மூலம் அவர்கள் வெளியேறினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் கப்பலில் இருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜப்பானை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக ஜப்பான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த இருவரும், 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் மீதம் இருப்பவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.





