அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
வட.மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டமானது மன்னார் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும்.
மேலும் இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள்.
குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.