இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவு அரசாணை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அதிபராக கோதபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி வகித்து வருகின்றனர்.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே திங்கள் கிழமை இரவு அரசாணை வெளியிட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.
இந்த அரசாணை குறித்த விபரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.