கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சரி தற்போது, தரவரிசை பட்டியலை பார்க்கலாம்.
இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 110 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதன் பின்னணியில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 108 மதிப்பீட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 105 மதிப்பீட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 98 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்;ந்தும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, 91 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 85 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 81 மதிப்பீட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 61 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 49 மதிப்பீட்டு புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
சிம்பாப்வே கிரிக்கெட் அணி, 17 மதிப்பீட்டு புள்ளிகளுடன் பதினொராவது இடத்தில் உள்ளது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி, புள்ளியெதுவும் இல்லாத நிலையில் இறுதி இடத்தில் உள்ளது.