கொரோனா வைரஸ் தாக்கதத்திலிருந்து கனேடியர்களைப் பதுகாப்பதற்கு உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார் நிபுணர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரவேண்டும் என்றும் அவர் கோரினார்.
அத்துடன் ரொரண்டோவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தி;றகு உள்ளவர்கள் தொடர்பில் அதீத கரிசனை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.