மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தொவித்து மட்டக்களப்பில் சட்டவாளர்கள் பணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்த சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோரனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம்,கொரனாவிற்கு கிழக்குதான் இலக்கா?,மட்டக்களப்பினை சுடுகாடாக்காதே,கொரனாவிற்கு கிழக்குத்தான் இலக்கா போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடானது மட்டக்களப்பு மாவட்டத்தினை முற்றுமுழுதாக பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்கள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டவாளர்கள் பே.பிரேம்நாத் தெரிவித்தார்.