தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இதனை தவிர நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை தவிர நாங்கள் எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தர முடியாது அதே போல் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை.
அதன் காரணமாகத்தான் நாங்கள் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பெடுத்து மூன்று மாதங்கள் காலம் ஆகியும் நாம் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை.
அவர்களுடன் பேசி எந்தவித பயனும் இல்லை எனவே நாங்கள் இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் இணைந்து செயற்படுவதன் மூலமே நமக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை எனினும் நாங்கள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம் அதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.





