அமெரிக்காவில் கொரோனா வரைஸ் பரவிவரும் நிலையில் மக்களின் மருத்துவப் பரிசோதனைகளை இராணுவக் கப்பல்களில் நடத்தவுள்ளது.
அந்தவகையில், இரு பெரும் இராணுவக் கப்பல்களை அமெரிக்கா மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது.
USNS comfort மற்றும் USNS mercy ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும்.
நியூயோர்க், வோஷிங்ரன் ஆகிய இருபெரும் நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம் என்பதோடு ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது.
இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு உள்ள நெருக்கடியைக் குறைக்க இயலும். ஒரு கப்பல் நோர்ஃபோல்க் துறைமுகத்திலும் இன்னொரு கப்பல் சாண்டியாகோ துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன