இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக
அதிகரித்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாகப் பரவி வரும்
கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்களில் ஏராளமான நோயாளிகளை
உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில், கொரோனாவால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694இல் இருந்து 724 ஆக
உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
17 ஆக உயர்ந்துள்ளது.