கொரோனா தொற்றுநோயை பரப்பக்கூடிய சட்டவிரோதமாக
குடியேறியவர்களைத் தடுக்க அமெரிக்க இராணுவ வீரர்களை எல்லைக்கு
அனுப்புவதை கனடா ஊக்கப்படுத்துகிறது என்று வெளியான தகவல்களை
முழுமையாக நிராகரிப்பதாக துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்
(Chrystia Freeland)உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எல்லையில் இராணுவ வீரர்களை பயன்படுத்துவதுவது
தொடர்பில் இரு நாடுகளும் சாத்தியம் குறித்து விவாதித்து வருவதாக பிரதமர்
ஜஸ்டின் ரூடோ செய்தியாளர் சந்திபபில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரதிப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland)
அவ்வாறான திட்டங்கள் எவையும் இல்லை என்று உறுதிபடக் கூறியதோடு
கனடாவும் அமெரிக்காவும் உலகின் மிக நீண்ட இராணுவமயமாக்கப்படாத
எல்லையைக் கொண்டுள்ளன, மேலும் அது அப்படியே இருப்பது எங்கள்
இரு நாடுகளின் நலன்களுக்கும் மிகவும் முக்கியமானது என்றும்
குறிப்பிட்டுள்ளார்.