நீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில்
இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும்
நம்பக்கூடாது. நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு பொதுமக்களைக்
கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இராணுவ அதிகாரியை
சிறிலங்கா ஜனாதிபதி விடுவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவதுதான் ஒரே தீர்வு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக
விசாரணையாக மாற்றியதன் விளைவு தான் இது.
கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம்.
கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும்
தயாரில்லை. தமிழினப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு
பாதுகாப்புக் கேட்க ஐ.நாவிடம் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரவேண்டும் –
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





