கனடியர்களில் அறுவரில் ஒருவர் சமஷ்டி அரசாங்கத்தினால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள் என்று ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடிய தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயிரத்து 96 கனடியர்களிடம் சமஷ்டி அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பிலான நம்பிக்கை தொடர்பிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த அடிப்படையில் 16சதவீதம் பேர் முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதாகவும் 40சதவீதமானவர்கள் ஓரளவு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.