கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும், மூன்று நாட்களுக்கு மூடுமாறு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை மூடுமாறு அவர் இன்று அறிவித்துள்ளார்.
மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டே பாடசாலைகளை வெள்ளிக்கிழமை வரை மூடுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி வரும் புயல், கிழக்கு மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையே நாளை மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





