நாங்கள் கொரோனா வைரசின் தோற்றத்தை அறிவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tetros Adanom Capreius) தெரிவித்தார்.
மேலும் விசாரணையின் கட்டுப்பாட்டை சீனாவிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டிய விமர்சகர்க ளை, இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் நாங்கள் வுஹானிடமிருந்து ஆய்வைத் தொடங்குவோம், அங்கு என்ன நடந்தது என்பதை அறிவோம் என்று அவர் கூறினார்.
கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வேறு வழிகள் இருக்கிறதா என்று ஆராய்வோம். இந்த வைரசின் தோற்றத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏனெனில் இது எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.