போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயச் சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்?
பிரதமர் மோடி பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் மூன்று விவசாயச் சட்டங்களை இரத்து செய்வதற்கான அடித்தளமாக பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.