அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட, மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், பிலடெல்பியா உள்ளிட்ட மாகாணங்களில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வரும் டிரம்ப், இந்த மாகாணங்களில் முறைகேடுகள் செய்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டுகிறார்.
இந்த நிலையில், அரிசோனா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு மாகாண அரசுகளும் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கியுள்ளன.
விஸ்கான்சின் மாகாணத்தில் ஜோ பைடன் டிரம்பை விட 20 ஆயிரத்து 700 வாக்குகளையும், அரிசோனா மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.