ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 707பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் ஏழு உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, சிவப்பு வலயப்பகுதிகளில் நிலைமைகள் இன்னமும் சுமூகமாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அல்பேர்ட்டா மற்றும் கியூபெக்கிலும் நிலைமைகள் அபாயகரமானதாக உள்ளதாக பொதுசுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.