கார்த்திகை தீபத் திருநாளில் வட மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிடுவதற்கு ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதுதொடர்பாக காட்டமான கண்டன அறிக்கையொன்றை ஒருங்கிணைந்த கட்சித்தலைவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
கண்ட அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக அந்த கண்டன அறிக்கை எதிர்வரும் ஒருசில நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.