காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்படக் கூடிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கண்காணிக்க வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.