குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின், ராஜ்யசபா உறுப்பினர் அயப் பரத்வாஜ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
67 வயதுடைய இவர், ஒக்டோபர் மாதம் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நாடாளுமன்ற உறுப்பினர் அயப் பரத்வாஜ் இன்று காலமானார்.
கடந்தவாரம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் அகமது படேல் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில், ஒரே வாரத்தில் குஜராத் மாநிலம், இரண்டாவது ராஜ்யசபா உறுப்பினரையும் இழந்துள்ளது.