புரெவி புயலை கண்டு தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்க கடலில், உருவாகியுள்ள புரெவி புயலினால், தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதால், புயலை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.
வரும் 4ஆம் திகதி வரை அதி கனமழை இருக்கும் என்பதால், தென்மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.