பூர்வீக குடிகளான தமிழ் இந்துக்களை அவமதித்தமைக்கு சிறிலங்கா அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளன.
தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான கார்த்திகை தீப நிகழ்வினை முன்னெடுக்கவிடாது காவற்றுதுயினர் மற்றும் படையினர் திழட்டமிட்டுதடைகளை ஏற்படுத்தியுள்ளதோடு மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டுள்ளனர்.
எனவே, இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்து மக்களிடத்தில் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா கையொப்பமிட்டுள்ளதோடு, ஏனைய அரசியல் கட்சிகள் அணைத்தும் தமது ஏகமனதான இணப்பாண்டினையும் வெளியிட்டுள்ளனர்.