கொரோனா வைரஸுக்கு இலக்காகி பாதிப்படைந்துள்ள மாகாணங்கள்அனைத்துக்கும் பாகுபாடின்றி தடுப்பூசி மற்றும் மருந்துகளை வழங்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
தற்போது, பாதிப்புக்களின் தரவுகள் அனைத்தும் பகிரங்கமாகவே காண்பிக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் எந்த பகுதிகளுக்கு தடுப்பூசி அவசியமானது என்பதை அனைவராலுமே உணர்ந்து கொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் அதேநேரம், அனைத்துக்கனடியர்களின் பாதுகாப்பதையே இலக்காக கொண்டிருப்பதாகவும் கூறினார்.
நாடாளவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதோடு களஞ்சியப்படுத்தல் வசிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.