யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஆயிரத்து10 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று,யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர்களுக்கு, அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நிவாரணங்களை வழங்கி வருகிறோம்.
தற்போதைய நிலையில், யாழ்ப்பாண மாவட்டம் சற்று கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. எனினும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து இந்த கட்டுப்பாட்டினை தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.