ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்கு தான் தெரியும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்தார். ரஜினி உடனான சந்திப்புக்கு பின் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரஜினி உடனான சந்திப்பு வழக்கமானது. அரசியல் நிலைப்பாட்டை ரஜினியே வெளிப்பட்டுத்துவார். ரஜினி என்ன மனநிலையில் உள்ளார் என்பது அவருக்குதான் தெரியும்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது அவருக்குதான் தெரியும். உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன் என்றார்.