ரஷ்ய கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்களும், ஒரு எண்ணெய் தாங்கி கப்பலும் திருகோணலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
வழிகாட்டல் ஏவுகணைக் கப்பலான வரியாக் , நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான அட்மிரல் பான்ரெலீவ், மற்றும் நடுத்தர சமுத்திர எண்ணெய் தாங்கி கப்பலான பிசெங்கா ஆகிய மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்களுமே நேற்று முன்தினம் திருகோணமலை துறைமுகத்துக்க்கு வந்துள்ளன.
மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் வந்துள்ள இந்தக் கப்பல்கள், நாளை வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கடற்படையின் சயுர என்ற போர்க்கப்பலுடன் ரஷ்ய போர்க்கப்பல்கள் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளன.