வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மாலை புரெவி புயலாக உருவெடுத்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல், இன்றுமாலை, திருகோணமலைக் கிழக்கே, 400 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் வரும் 4ஆம் திகதி அதிகாலை கன்னியாகுமரி – பாம்பனுக்கு இடையே தென்தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால், திருவனந்தபுரத்துக்கு வரும் 4ஆம் திகதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.