விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனேடியப் பிரதமரின் கருத்து தேவையற்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‛அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகள் இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம்.” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்,
‛டில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனேடிய பிரதமர் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இதுபோன்ற கருத்துகள் தேவையற்றது. இவை, ஒரு நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பானவை,’ என்று குறிப்பிட்டுள்ளார்.