அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் மாகாணத்தின் பத்து சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி (JESON KENNY) தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து ஏப்பரலில் இருந்து சிரேஷ்டபிரஜைகள் மற்றும் ஏனையவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுவருவதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் கொரோனா தடுப்பூசியானது ஆபத்தில் உள்ளவர்களின் முன்னுரிமை அடிப்படையிலேயே அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.