அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலரைத் தெரிவு செய்வதில் ஜோ பைடென் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடென் தனது அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவர் பாதுகாப்புச் செயலராக, முன்னாள் துணை பாதுகாப்புச் செயலரான மிச்சேல் புளூர்னோய் (Michele Flournoy) என்ற பெண்ணை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கு ஜனநாயக கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய பாதுகாப்பு செயலாக தேர்வு செய்ய வேண்டும் என்று கறுப்பின தலைவர்கள், ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.