கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசி தொடர்பாக மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் ஈடுபட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, ஜோர்ஜ் புஷ், பில் கிளின்டன் ஆகியோர் தடுப்பூசியை பொது மக்கள் முன்னிலையில் செலுத்திக் கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்.