இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங், சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கடற்படை நாளை முன்னிட்டு டெல்லியில் இன்ற இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன் போது அவர், “இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால், இந்திய கடற்படைக்கென்று ஒரு வழிகாட்டும் நெறிமுறை உள்ளது. அதைச்செய்வோம் என்று குறிப்பிட்டார்.