ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசியை மாகாண ரீதியாக வழங்குவதற்குரிய ஆரம்பத்திட்டங்களை அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக விநியோக நிருவாகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்தானது தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிக பரிசோதகள் நிறைவுக்காக கனடா காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், கனடா தடுப்பு மருந்தை பெற்றவுடன் நாடாளவிய ரீதியில் விநியோகிப்பதற்கான திட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நல்ல தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.