கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.
நேற்று மாலை அட்டாளைச்சேனையில் 13 பேருக்கும், அக்கரைப்பற்றில் 6 பேருக்கும், ஆலையடிவேம்பில் 2 பேருக்கும், திருக்கோவில் மற்றும் கல்முனை தெற்கு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது என்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் லதாகரன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 156 பேர் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் மருத்துவர் லதாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.