குளிர்காலத்தில் கொரோனா பரவலைத் தடுப்பது மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை 20செல்சியஸிலும் குறைவான வெப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால், கனடியர்களுக்கு அதனுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, இந்த நிலைமையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.