நடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொடர்பான கைத்தொலைபேசி செயலி உரிய முறையில் செயற்படவில்லை என்று முறைப்பாடுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இவ்விதமான நிலைமைகள் அதிகரித்துள்ளதாக பயனாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கனடாவில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணல் மற்றும் தடமறிதல் செயற்பாட்டிற்காக சமஷ்டி அரசாங்கத்தினால் செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த செயலியில் சில குழப்பங்கள் காணப்பட்டதன் காரணமாக அண்மையில் மறுசீரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.