சென்னையில் இன்று அதிகாலை தொடக்கம் கொட்டி வரும் கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இதனால், இன்று அதிகாலை முதல் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் கனமழை கொட்டுகிறது.
இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரால் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.