சென்னை, புழல் ஏரி திறந்து விடப்படவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொட்டி வரும் மழையினால், 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளது.
இதனால்,நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுற்றி உள்ள கிராமங்கள் வழியாக செல்லும் என்பதால், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.