வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மருத்துவர் ரா. அர்ஜுனமூர்த்தியும், தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, ரஜினிகாந்த், அறிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்.
கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன்.
நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.” என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், மருத்துவர் ரா.அர்ஜுனமூர்த்தி தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என ரஜினி காந்த் கீச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





